Sunday, January 1, 2012

காம்பியரிங் ரம்யா


டி.விநிகழ்ச்சியாகட்டும் மேடை நிகழ்ச்சியாகட்டும் தனது தெளிவான உச்சரிப்பு, வர்ணனை மூலம் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் தொகுப்பாளர் என்றால் நமக்கு பளிச்சென்று நினைவிற்கு வருபவர் ரம்யா.
காம்பியரிங்கைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன? என்று ரம்யாவிடம் கேட்டோம். உண்மையில் காம்பியரிங் செய்யும் வாய்ப்புதான் என்னைத்தேடி வந்தது. யு.ஜி. விசுவல் கம்யூனிகேஷடன, பி.ஜி மாஸ் கம்யூனிகேஷன் முடித்திருக்கிறேன் சிறுவயதிலிருந்தே எனக்கு பரதநாட்டியத்திர் இன்ட்ரெஸ்ட் அதிகம் உங்களுக்குத் தெரியுமா... பரதநாட்டியத்தில் என்னுடைய குரு நடிகை ஷோபனாதான். நான் விஸ்காம் மூன்றாம் வருஷம் படிக்கும்போது விஜய் டி.வியில் புதுசா ஆரம்பிக்கப்போகும் ஒரு புரோகிராமிற்கு தொகுப்பாளர் தேவைப்படுதுன்னு சொன்னாங்க. அதுல செலெக்ட் ஆகி நான் பண்ணின புரோகிராம் தான் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சி அதுதான் எனக்கு நல்ல அறிமுகம் வாங்கித் தந்தது என்று மிக அமைதியாக பதில் சொன்ன ரம்யா காம்பியரிங் பண்ணும்போதுதான் படபடவென பேசுவேனே தவிர இயல்பாகவே நான் அமைதியான பெண் எனக்கு ஃப்ரண்ட்ஸ் கூட குறைவாகத்தான் இருக்கிறார்கள் என்று நம் மனதில் தோன்றிய கேள்விக்கு அவரே பதிலளித்தார்.
தொகுப்பாளர்கள் எல்லாம் சீரியல் வாய்ப்புக்காக ஓடிக்கொண்டிருக்க இவரோ சீரியலே வேண்டாம் என்று ஒதுங்குகிறார். நீங்கள் ஏன் டி.வி சீரியல்களில் நடிக்கவில்லை என்று கேட்டால் கைகளை உயர்த்தி ஒரு கும்பிடு போடுகிறார்...
எனக்கு மாமியார் மருமகன்னு இப்ப வழக்கமாவர்ற தமிழ் சீரியல்கள்ல உடன்பாடே இல்ல. அதுமாதிரி சீரியல்கள்ல என்னால நடிக்க முடியாது நிகழ்ச்சி தொகுப்பாளராகவே நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. அதைத் தக்க வைத்துக்கொண்டால் போதும் என்று நிம்மதி பெரூமூச்சு விடுகிறார் ரம்யா.
இன்னொரு முக்கியமான தகவல் யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்டும் படங்களைத் தேர்ந்தெடுக்கும் கதை இலாகா ஆலோசகர்களில் இளையதலைமுறையினரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் ரம்யா.
காம்பியரிங் இன்னும் கொஞ்ச நாட்கள்தான். அழகு இருக்குற வரைக்கும். ஆனால் நான் படித்த படிப்புக்கு ஏற்ற ஒரு வேலை இருந்தால் நல்லது என்று நினைத்தேன். யு.டி.வி தனஞ்செயன் மூலம் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று கூறும் ரம்யா கடவுள் பக்தி அதிகம் உள்ளவராம்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் திருப்பதி வெங்கடாஜலபதியைத் தரிசனம் செய்யக் கிளம்பி விடுவாராம். அதற்கேற்றாற்போல் கோவிலுக்குப் போய்விட்டு வந்த ஒவ்வொரு முறையும் எனக்கு நிச்சயமாக ஏதாவது நல்ல விஷ்யம் ஒன்று நடந்து கொண்டுதான் இருக்கிறது என்கிறது என்கிறார் சென்டிமெண்ட்டாக.  அழகு இருக்குற வரைக்கும்தான் காம்பியரிங்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More