ஓஸ்தி

சிம்பு, ரிச்சா கங்கோபாத்யாய் நடித்தது. இயக்கம் தரணி

மயக்கம் என்ன

தனுஷ், ரிச்சா கங்கோபாத்யாய் நடித்தது. இயக்கம் செல்வராகவன்

போராளி

சசிகுமார் நடிப்பில் வெளிவந்துள்ள படம். இயக்கம் சமுத்திரகனி

மம்பட்டியான்

பிரசாந்த், மீரா ஜாஸ்மின் நடித்துள்ள படம். இயக்கம் தியாகராஜன்

மௌனகுரு

அருள்நிதி, இனியா நடித்துள்ள படம். இயக்கம் சாந்தகுமார்

Wednesday, January 4, 2012

வெடியில் வெடிக்கும் விஷால்


விஷால், சமிரா ரெட்டி நடிக்க பிரபுதேவா இயக்குகிறார். இசை விஜய் ஆண்டனி. இதில் புதுவிஷயம் என்னவென்றால் இப்படத்தில் விஜய் ஆண்டனி இசையில் முதன்முதலாக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் சமீரா ரெட்டியோடு ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். விஷாலும் விஜய் ஆண்டனியும் லயோலா காலேஜில் படிக்கும் போதே நண்பர்களாக இருந்தவர்கள். இப்போதுதான் இருவரும் சேர்ந்து படத்தில் வேலை செய்யும் வாய்ப்பு எட்டியிருக்கிறது. மேலும் தேவி ஸ்ரீபிரசாத் ஆல்பம் பண்ணிக் கொண்டிருந்தபோது அவருக்கு சவுண்ட் இன்ஜினியராக ஒர்க் செய்தது விஜய் ஆண்டனி.  ஆக, இம்மூவரின் கூட்டணியும் ஒன்றாக இணைந்து இப்படத்தில் வெடிக்கவிருக்கிறது.

மயக்கம் என்ன சிறப்பம்சம்


இப்படத்தில் தனுஷ், ரிச்சோ கங்கோ பாத்யாய் நடிக்கின்றனர். இப்படம் பத்திரிக்கையாளர்கள் பற்றின கதை. அடுத்த தலைமுறையினர் சந்திக்கவிருக்கும் பிரச்சினைகளை கருவாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் தனுஷும், செல்வராகவனும் மட்டுமே எழுதியிருக்கிறார்கள்.  அதுமட்டுமில்லாமல் இருவரும் சேர்ந்து ஒரு பாடலும் பாடியிருக்கிறார்கள். விரைவில் வெள்ளித்திரைக்கு வரவிருக்கும் இப்படம் ரசிகர்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் கட்டாயம் நிறைவேற்றும். இப்படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் நெடுநாள் கிடப்பில் கிடந்த இரண்டாம் உலகம் படத்தை தொடங்கவிருக்கிறார். இப்படத்தில் ஆர்யாவும் அவருக்கு ஜோடியாக அனுஷ்காவும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். செல்வராகவனும் ஹாரிஸ் ஜெயராஜும் முதன்முறையாக இப்படம் மூலம் இணைகிறார்கள்.

தயாரிப்பாளரான இயக்குனர் பாண்டிராஜ்


இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த பாண்டிராஜ் தற்போது தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். தற்போது பசங்க புரொடக்சன் கம்பெனி என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இந்நிறுவனத்தின் மூலம் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்க இருப்பதாக கூறியிருக்கிறார் பாண்டிராஜ். புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு காரணம் என்னவென்று கேட்டதற்கு, ”நான் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்த நேரத்தில் எனக்காக இயக்குநராக இருந்து தயாரிப்பாளராக மாறியவர் சசிகுமார். நானும் அவர் பாணியையே பின்பற்றப் போகிறேன்என்கிறார். மேலும் இவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் புதுப்படத்திற்கு மெரீனா என்று பெயர் வைத்திருக்கிறார். மெரீனா கடற்கரையில் சுண்டல் விற்வர்களை கருவாகக் கொண்டு கதையை பின்னியிருக்கிறார். இப்படத்தில் டிவி தொகுப்பாளரான சிவகார்த்திகேயன் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக களவாணி ஓவியா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

Sunday, January 1, 2012

காம்பியரிங் ரம்யா


டி.விநிகழ்ச்சியாகட்டும் மேடை நிகழ்ச்சியாகட்டும் தனது தெளிவான உச்சரிப்பு, வர்ணனை மூலம் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் தொகுப்பாளர் என்றால் நமக்கு பளிச்சென்று நினைவிற்கு வருபவர் ரம்யா.
காம்பியரிங்கைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன? என்று ரம்யாவிடம் கேட்டோம். உண்மையில் காம்பியரிங் செய்யும் வாய்ப்புதான் என்னைத்தேடி வந்தது. யு.ஜி. விசுவல் கம்யூனிகேஷடன, பி.ஜி மாஸ் கம்யூனிகேஷன் முடித்திருக்கிறேன் சிறுவயதிலிருந்தே எனக்கு பரதநாட்டியத்திர் இன்ட்ரெஸ்ட் அதிகம் உங்களுக்குத் தெரியுமா... பரதநாட்டியத்தில் என்னுடைய குரு நடிகை ஷோபனாதான். நான் விஸ்காம் மூன்றாம் வருஷம் படிக்கும்போது விஜய் டி.வியில் புதுசா ஆரம்பிக்கப்போகும் ஒரு புரோகிராமிற்கு தொகுப்பாளர் தேவைப்படுதுன்னு சொன்னாங்க. அதுல செலெக்ட் ஆகி நான் பண்ணின புரோகிராம் தான் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சி அதுதான் எனக்கு நல்ல அறிமுகம் வாங்கித் தந்தது என்று மிக அமைதியாக பதில் சொன்ன ரம்யா காம்பியரிங் பண்ணும்போதுதான் படபடவென பேசுவேனே தவிர இயல்பாகவே நான் அமைதியான பெண் எனக்கு ஃப்ரண்ட்ஸ் கூட குறைவாகத்தான் இருக்கிறார்கள் என்று நம் மனதில் தோன்றிய கேள்விக்கு அவரே பதிலளித்தார்.
தொகுப்பாளர்கள் எல்லாம் சீரியல் வாய்ப்புக்காக ஓடிக்கொண்டிருக்க இவரோ சீரியலே வேண்டாம் என்று ஒதுங்குகிறார். நீங்கள் ஏன் டி.வி சீரியல்களில் நடிக்கவில்லை என்று கேட்டால் கைகளை உயர்த்தி ஒரு கும்பிடு போடுகிறார்...
எனக்கு மாமியார் மருமகன்னு இப்ப வழக்கமாவர்ற தமிழ் சீரியல்கள்ல உடன்பாடே இல்ல. அதுமாதிரி சீரியல்கள்ல என்னால நடிக்க முடியாது நிகழ்ச்சி தொகுப்பாளராகவே நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. அதைத் தக்க வைத்துக்கொண்டால் போதும் என்று நிம்மதி பெரூமூச்சு விடுகிறார் ரம்யா.
இன்னொரு முக்கியமான தகவல் யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்டும் படங்களைத் தேர்ந்தெடுக்கும் கதை இலாகா ஆலோசகர்களில் இளையதலைமுறையினரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் ரம்யா.
காம்பியரிங் இன்னும் கொஞ்ச நாட்கள்தான். அழகு இருக்குற வரைக்கும். ஆனால் நான் படித்த படிப்புக்கு ஏற்ற ஒரு வேலை இருந்தால் நல்லது என்று நினைத்தேன். யு.டி.வி தனஞ்செயன் மூலம் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று கூறும் ரம்யா கடவுள் பக்தி அதிகம் உள்ளவராம்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் திருப்பதி வெங்கடாஜலபதியைத் தரிசனம் செய்யக் கிளம்பி விடுவாராம். அதற்கேற்றாற்போல் கோவிலுக்குப் போய்விட்டு வந்த ஒவ்வொரு முறையும் எனக்கு நிச்சயமாக ஏதாவது நல்ல விஷ்யம் ஒன்று நடந்து கொண்டுதான் இருக்கிறது என்கிறது என்கிறார் சென்டிமெண்ட்டாக.  அழகு இருக்குற வரைக்கும்தான் காம்பியரிங்.

சூப்பர் ஸ்டார்ஸ் கூட்டணி.


தொம்மனும் மக்களும் பெஸ்ட் ஆக்டர் ஆகியவை மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோரின் நடிப்புக் கூட்டணியில் வெற்றி பெற்ற படங்கள். தயாரிப்பாளர். இயக்குநர், நடிகர் என பன்முகம் கொண்ட லால் தற்போது மம்முட்டியை வைத்து கோபரா என்ற படத்தை , இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தை மம்முட்டியின் பிளே ஹவுஸ் நிறுவனமும் லாவின் லால் கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. காமெடி த்ரில்லராக உருவாக்கும் இந்தப் படத்தில் மம்தா மோகன்தாஸ், லட்சுமிராய் ஆகியோருடன் லாலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  சூப்பர் ஸ்டார்ஸ் கூட்டணி.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More