ஓஸ்தி

சிம்பு, ரிச்சா கங்கோபாத்யாய் நடித்தது. இயக்கம் தரணி

மயக்கம் என்ன

தனுஷ், ரிச்சா கங்கோபாத்யாய் நடித்தது. இயக்கம் செல்வராகவன்

போராளி

சசிகுமார் நடிப்பில் வெளிவந்துள்ள படம். இயக்கம் சமுத்திரகனி

மம்பட்டியான்

பிரசாந்த், மீரா ஜாஸ்மின் நடித்துள்ள படம். இயக்கம் தியாகராஜன்

மௌனகுரு

அருள்நிதி, இனியா நடித்துள்ள படம். இயக்கம் சாந்தகுமார்

Saturday, December 31, 2011

டிஸ்கவுண்ட்

அதிக சம்பளம் கேட்பதால்தான் தற்போது நிறைய தெலுங்குப் படங்களில் நடிப்பதில்லை என்று தன் மீது கூறப்படும் புகாரை இலியானா மறுத்துள்ளனர் தற்போது இந்தியில் பார்பி, தமிழில் விஜய்யுடன் நண்பன் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருவதால்தான் தெலுங்கில் எனது படங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அஜீத்துக்கு ஜோடி

அழகான தங்கை என்றால் பளிச்சென்று நினைவுக்கு வருபவர் சரண்யா மோகன். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் 20 படங்களுக்குக் குறையாமல் நடித்திருந்தாலும் தமிழில் வெண்ணிலா கபடி குழுவில் மட்டுமே ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது வெளியாகியிருக்கும் வேலாயுதத்தில் கூட விஜய்யின் தங்கையாகவே நடித்திருக்கிறார். ஹீரோயினாக முடியவில்லையே என்ற இவரது ஏக்கத்தைத் தீர்க்கும் விதமாக கன்னடப் படம் ஒன்று இவர் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறது. கன்னட ஹீரோ அஜித்திற்கு ஜோடியாக ஈ பூமி பானு என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இதற்காக கன்னடம் கற்பதில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளார் சரண்யா மோகன்.  

நயன்தாராவின் விருப்பம்



ஒரு வழியாக ஸ்ரீராம ராஜ்ஜியம் படம் நவம்பர் 17 ஆம் தேதி ரிலீஸாவது உறுதியாகிவிட்டது. சீதையாக நயன்தாரா நடித்திருப்பது சர்க்சையையும் அதே சமயம் எதிர்பார்ப்பையும் ஏற்கனவே கிளப்பிவிட்டிருக்கிறதுஒரு வழியாக இந்துவாக மதம் மாறி சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டதால் இப்போது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு தெலுங்கு ரசிகர்களிடம் ஏறியிருக்கிறது. பாலகிருஷணா ராமராக நடிக்க, வால்மீகி கதாபாத்திரத்தில் தெலுங்கின் மூத்த நடிகர் நாகேஸ்வரராவ் நடித்திருக்கிறார். லட்சமணனாக ஸ்ரீகாந்தும், பரதனாக சாய்குமாரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். நயன்தாரா இப்போதெல்லாம் விரும்பிக் கேட்பது ஸ்ரீராம ராஜ்ஜியத்தின் பாடல்களைத்தானாம். காரணம் படத்திற்கு இசை நயன்தாராவிற்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் இளையராஜாவாச்சே

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More